புதுச்சேரியில் ரூ.4,000 பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் சிக்கல்!!
By : King 24x7 Desk
Update: 2026-01-10 05:13 GMT
புதுச்சேரியில் ரூ.4,000 பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்திருந்தார். 3.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4000 தர ரூ.140 கோடி வழங்க கோரி நிதித்துறைக்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பணம் இல்லை எனக்கூறி ஆவணங்களை நிதித்துறை திருப்பி அனுப்பியதால் புதுச்சேரியில் பொங்கல் பரிசு தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.