ரிதன்யா தற்கொலை வழக்கில் சட்டப்பிரிவை மாற்றக் கோரி மனு!!
By : King 24x7 Desk
Update: 2025-07-31 12:47 GMT
rithanya
திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில் சட்டப்பிரிவை மாற்றக் கோரி டிஜிபி அலுவலகத்தில் ரிதன்யாவின் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார். குண்டர் சட்டத்தின் கீழ் ரிதன்யாவின் கணவர் குடும்பத்தினரை கைது செய்ய மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. தனது மகளின் சந்தேக மரண வழக்கின் பிரிவை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் ரிதன்யா தந்தை அண்ணாதுரை கோரிக்கை வைத்தார். தனது மகள் இல்லாமல், இருந்தும் இறந்தது போல வாழ்ந்து வருவதாக ரிதன்யாவின் தந்தை உருக்கம் தெரிவித்தார்.