கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 650 பேர் மீது வழக்குப்பதிவு

Update: 2024-06-23 08:10 GMT

bjp

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் சென்னையில் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நுங்கம்பாக்கத்தில் 3 இடங்களிலும், தியாகராயர் நகர் அபிபுல்லா சாலையில் ஒரு இடத்திலும் போராட்டம் நடைபெற்றது. பாஜக நிர்வாகிகள் கரு நாகராஜன், அமர் பிரசாத் ரெட்டி, வி.பி.துரைசாமி, எம்.எல்.ஏ.காந்தி உள்ளிட்ட 650 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. 

Similar News