ஒரு வயசுல ஒண்ணாங்கிளாஸ் படிச்சியா..!? பொய் சொன்ன டிரைவருக்கு ஐகோர்ட் ரூ.50 அபராதம்: மதுரை காந்தி மியூசியத்துக்கு கொடுக்க சொல்லி உத்தரவு
By : King24x7 Rafi
Update: 2024-07-18 15:40 GMT
மனுதாரரின் மனுவில் கூறியுள்ள ஆதாரங்களைப் பார்க்கும் போது ஒரு வயதில் முதல் வகுப்பில் சேர்ந்து 13 வயதில் 1982ல் 12ம் வகுப்பை முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மனுதாரர் முழுக்க முழுக்க பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல்களை தந்த மனுதாரருக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை 2 வாரங்களில் மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு அவர் நேரில் சென்று தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.