பெஞ்சல் புயலின்போதும் மெட்ரோ ரயில்கள் இன்று வழக்கம்போல் இயங்கும் நிர்வாகம் தகவல்
By : King 24x7 Angel
Update: 2024-11-30 04:53 GMT
வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் பெஞ்சல் புயலின்போதும் மெட்ரோ ரயில்கள் இன்று வழக்கம்போல் சனிக்கிழமை அட்டவணைப்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.