பாலஸ்தீன போராளிகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் படைகள் : ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை!!
By : King24x7 Rafi
Update: 2024-07-31 05:06 GMT
poly
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்த இஸ்மாயில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 258 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 90 ஆயிரத்து 589க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.குறிப்பாக பாலஸ்தீன போராளிகளைக் குறி வைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.