2024 ஐபிஎல் CSK-க்கு எதிராக கேப்டன் சுப்மன் கில், ஆஷிஷ் நெஹ்ரா தீவிரமாக திட்டம் !!
2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் விளையாட உள்ளது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலைக்கு குஜராத் அணி தள்ளப்பட்டுள்ளது.
எனவே சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றி பெற அந்த அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் தீவிரமாக திட்டமிட்டுள்ளனர். அவர்களது திட்டம் தோனியை ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்துவது குறித்து முக்கியமாக திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி மிக சிறப்பாக ரன்குவைத்து வந்தார் கடைசி ஒன்று அல்லது இரண்டு ஓவர்களில் மட்டும் பேட்டிங் செய்து வந்த அவர் அதில் அதிக சிக்ஸர் களை அடித்து விரிவாக ரன் குவித்துள்ளார்.
ஆனால் அவரது அதிரடி ஆட்டத்தை முதல் அணியாக பஞ்சாபின் அணி கட்டுப்படுத்தியது. அந்த போட்டியில் தான் தோனி முதல் முறையாக இந்த ஆண்டு தனது விக்கெட்டை இழந்தார். அதுவரை ஏழு போட்டிகளில் டிக்கெட்டை இலக்காமல் ஆடி வந்த தோனி பஞ்சாப் அணிக்கு எதிராக இரண்டு முறை விக்கெட்களை இழந்தார்.
தோனிக்கு காலில் இருக்கும் காயம் காரணமாக வேகமாக ரன் ஓட முடியாத நிலையில் கடைசி ஓவர்களில் களமிறங்கி வருகிறார். கடைசி ஓவர்களில் வேகப் பந்து வீச்சாளர்கள் மட்டுமே வீசுவார்கள் என்பதால் அதற்கு ஏற்ப வேக பந்துவீச்சாளர்களை வைத்தே வலைப் பயிற்சியில் பேட்டிங் பயிற்சி செய்து வருகிறார்.
அதை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்திக் கொண்டது ராகுல் சாஹரை 19வது ஒருவரில் வீசவைத்து தோனியை கட்டுப்படுத்தியது. தோனி ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாண்டு வருகிறார். தோனியை கட்டுப்படுத்த பஞ்சாப் கிங் அணியின் திட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் அணியும் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
எப்படியும் தோனி குஜராத் அணிக்கு எதிராக போட்டியில் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை வந்தால் கடைசி இரண்டு ஓவர்களின் போது தான் களமிறங்குவார். அப்போது சுழற்சி பந்துவீச்சாளரை பந்து வீசவைத்து அவரை கட்டுப்படுத்த அந்த அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.