பாராலிம்பிக்கில் 2 வது வெண்கலத்தைப் பெற்ற இந்தியப் பெண்

Update: 2024-09-02 07:00 GMT

பிரீத்தி பால் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாரிஸில் நடைபெற்று வரும் 2024 பாராலிம்பிக் தொடர் மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றார். இது இந்த பாராலிம்பிக் தொடரில் அவர் வெல்லும் இரண்டாவது வெண்கலப் பதக்கம் ஆகும். மேலும், மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா வெல்லும் முதல் பதக்கமாகும். 

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரீத்தி பால் 30.01 வினாடிகளில் 200 மீட்டர் தூரத்தை கடந்து மூன்றாம் இடத்தை பிடித்தார். அதன் மூலம், வெண்கலப் பதக்கத்தை வென்றார். இது இந்தியாவின் ஆறாவது பதக்கமாக அமைந்தது.

இத்துடன் 2024 பாராலிம்பிக்கில் இந்தியா மொத்தம் ஏழு பதக்கங்களை வென்றுள்ளது ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்று உள்ளது. 7 பதக்கங்கள் வென்று இருக்கும் இந்தியா பதக்கப் பட்டியலில் 27 வது இடத்தில் உள்ளது.


Tags:    

Similar News