வரலாற்று சாதனை படைத்த அமெரிக்க அணியில் முன்னாள் இந்திய வீரர்

Update: 2024-06-07 09:44 GMT

அமெரிக்கா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

T20 T20 ,உலக கோப்பைஉலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அமெரிக்கா வரலாற்று சாதனை பதிவு செய்தது. சூப்பர் ஓவரையில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி ஒரு விக்கெட் இழந்து 18 ரன்கள் எடுத்தது. அடுத்து பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழந்து 13 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் பாகிஸ்தான் அமெரிக்கா வெற்றி பெற அந்த அணியின் சௌரப் நெட்ராவல்கர் முக்கிய பங்காற்றினார். சிறப்பாக பந்து வீசிய இவர் நாலு ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து. இரண்டு விக்கெட் களை வீழ்த்தினார். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து சௌரப் நெட்ராவல் இந்திய அணிக்காக விளையாடியது அம்பலமாகியுள்ளது.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவரப் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். யூ 19 இந்திய அணியில் இடம் பெற்று இருந்த சவுரப் 2010ல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்களை வந்து வீசி 16 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

14 ஆண்டுகள் கழித்து அணி மாறிய சவரப் அமெரிக்கா கிரிக்கெட் அணியில் களமிறங்கி டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் ஹசாம் தலையிலான பாகிஸ்தான் அணி தோல்வி அடைய முக்கிய காரணமாக விளங்கியுள்ளார். யூ 19 போட்டியில் இந்தியா தோல்வியுற்ற பாகிஸ்தான் அணியிலும் பாபர் அசாம் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போதைய போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அமெரிக்காவிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News