T20 உலக கோப்பை: இன்று களம் சந்திக்கும் அமெரிக்கா- பாகிஸ்தான் !!

Update: 2024-06-06 09:40 GMT

அமெரிக்கா- பாகிஸ்தான்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு டல்லாஸ் நகரில் நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, போட்டியை நடத்தும் அமெரிக்கா அணியும் எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் பயிற்சி ஆட்டமின்றி நேரடியாக உலகக் கோப்பையில் களம் காணுகிறது. கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது, பஹர் ஜமான் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பாகிஸ்தானின் பிரதான பலமே பந்து வீச்சு தான்.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், முகமது அமிர், அப்பாஸ் அப்ரிடி, சுழற்பந்து வீச்சாளர் ஷதப் கான் மிரட்ட காத்திருக்கிறார்கள்.சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் இமாத் வாசிம் விலா பகுதியில் காயத்தால் அவதிப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று கேப்டன் அசாம் தெரிவித்தார்.

அமெரிக்கா : மோனக் பட்டேல் தலைமையிலான அமெரிக்கா தொடக்க ஆட்டத்தில் கனடாவுக்கு எதிராக 195 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து அசத்தியது.

நியூசிலாந்து அணிக்காக விளையாடி விட்டு இடம்பெயர்ந்துள்ள ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன், முன்பு தென்ஆப்பிரிக்க ஜூனியர் அணிக்காக ஆடிய ஆன்ட்ரியாஸ் கவுஸ், இந்திய வம்சாவளியினர் கேப்டன் மோனக் பட்டேல், ஹர்மீத் சிங், சவுரப் நெட்ராவல்கர், பாகிஸ்தானில் பிறந்தவரான அலிகான் இப்படி பல நாட்டு வீரர்களின் கலவையாக உருவாகியுள்ள அமெரிக்கா இப்போது கவனிக்கக்கூடிய அணியாக மாறியுள்ளது.

உள்ளூர் சூழலில் விளையாடும் அமெரிக்க வீரர்கள் நிச்சயம் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவது இதுவே முதல் முறையாகும்.

Tags:    

Similar News