தமிழ்நாடு வாலிபால் அணிக்கு தூத்துக்குடி மாணவி தேர்வு

தமிழ்நாடு வாலிபால் அணிக்கு, தூத்துக்குடி தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-12-13 04:49 GMT

தமிழ்நாடு வாலிபால் அணிக்கு, தூத்துக்குடி தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (SGFI) சார்பில் 19 வயதிற்கு உட்பட்ட மாணவியர் தமிழ்நாடு வாலிபால் அணிக்கான தேர்வு திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில்,தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பில் பயிலும் மாணவி ஏ.அந்தோணி மெர்லின் கலந்து கொண்டு தமிழ்நாடு வாலிபால் அணிக்காக தேர்வாகி, வரும் கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய வாலிபால் போட்டிகளில் விளையாட உள்ளார்.  தமிழ்நாடு வாலிபால் அணிக்கு தேர்வாகி பள்ளிக்கும், தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி அந்தோணி மெர்லின், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ரவிக்காந்த், முத்துராஜன் ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் அண்டோ ரூபன்,மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன், பிடிஏ தலைவர் அமலதாசன்,எஸ்எம்சி தலைவி அமலாவதி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.


Tags:    

Similar News