மருதமலை முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஒரு அறிவிப்பு !!
பொங்கல் பண்டிகையையொட்டி மருதமலை முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தரும் நிலையில் கோவில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியீட்டுள்ளது.
விஷேச தினங்களில் இங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தால் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறைஅறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர். அதேபோல் பொங்கல் பண்டிகையையொட்டி கோவில்கள், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வது வழக்கம்.
அந்தவகையில் மருதமலை கோவிலுக்குப் பக்தர்கள் கூட்டம் அதிக அளவு வரும் நிலையில், நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கோவை மருதமலை கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என தகவல் தெரிவித்துள்ளனர். மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு அனுமதியில்லை.