நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான பஸ்-ரெயில் வசதிகள் !!!

Update: 2024-09-11 09:30 GMT

நாமக்கல் ஆஞ்சநேயர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான பஸ்-ரெயில் வசதிகள் !!!

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் என்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான்.

புனிதப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலாகும். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது. மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.

பஸ்-ரெயில் வசதிகள் நாமகிரி என்ற சிறப்புமிக்க நாமக்கல் நகரின் மையத்தில் இக்கோவில் வீற்றிருக்கிறது. நாமக்கல் ரெயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும், பஸ் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லலாம். சேலத்தில் இருந்து பஸ்சில் வருபவர்கள் சேலம் ரோடு சிக்னலில் இறங்கி நடந்து கோவிலுக்கு செல்லலாம். நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் டவுன் பஸ்சில் டிரைவர் பஸ்சை நிறுத்தினால் கோவில் வாசலில் இறங்கி கொள்ளலாம்.

இல்லை என்றால் சேலம் ரோடு சிக்னலில் இறங்கி கோவிலுக்கு செல்லலாம். நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில்தான் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வர முடியும். இக்கோவிலில் தங்கும் விடுதிகள் உள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நாமக்கல்லுக்கு பஸ் வசதி உள்ளது. இக்கோவில் சேலத்தில் இருந்து 57 கிலோ மீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து 43 கிலோ மீட்டர் தூரத்திலும், ஈரோட்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலும் கோவையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து 85 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.

இந்த கோவிலுக்கு முக்கிய நகரங்களில் இருந்து ரெயில் மூலமும் வரலாம். நாமக்கல் ரெயில் நிலையத்தில் பெங்களூர்- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - பழனி எக்ஸ்பிரஸ், பழனி-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், சேலம் - கரூர் பாசஞ்சர் ரெயிலும் நாமக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

Tags:    

Similar News