பொரித்த எண்ணையால் விளக்கு பற்ற வைக்கலாமா?

Update: 2024-08-21 08:34 GMT

விளக்கு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பொரித்த எண்ணையை விளக்கில் ஊற்றக் கூடாது என்பது முன்னோர்கள் வகுத்த விதி. அதே போல் விளக்கு பற்றவைக்கும் எண்ணையைச் சமயலுக்கும் பயன்படுத்தக் கூடாது என்பது விதி.

நவீன சாஸ்திரத்தின் படி ஒரு முறை பொரித்த எண்ணையால் மறுபடி சமையல் செய்வதும் தவறு. இதற்கு காரணமுண்டு.

முன்பு நம்பிக்கையாகவே இது கடை பிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அதனாலு- ண்டாகும் தீங்குகளை பற்றி நவீன சாஸ்திரம் கூறுகின்றது. பல சோதனைகள் செய்தே இதை நிரூபித்துள்ளனர்.

அப்பளம் முதலியவை பொரித்த பின் அந்த எண்ணையை பத்திரப்படுத்தி வைத்து மறுபடியும் பயன்படுத்தும் வழக்கம் இன்றும் உண்டு. இது தீமை விளைவிக்கும் என்பது நிபுணர்கள் கருத்து. பொரிப்பதற்காக எண்ணையை ஒரு முறை உபயோகித்தால் அது சூடாகும் போதே அதில் கார்பன் உருவாகும் அவ்வாறு கார்பன் உருவான எண்ணையில் வேறு எண்ணை சேர்த்தாலும் அதே எண்ணையை பயன்படுத்தினாலும் தாயாராகும் உணவுப் பொருளில் தீங்கு விளைவிக்கும் கூட்டுப் பொருள்கள் உருவாகும் என்று கண்டறிந்துள்ளனர். இந்த உண்மையை அன்றே புரிந்து கொண்டு இப்படி ஒரு வழக்கம் ஏற்படுத்தியிருந்தனர் எனக் கூறலாம்.

Tags:    

Similar News