மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் கோயிலுக்குள் நுழையலாமா?
மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் கோயிலில் பிரவேசிக்கவோ தரிசனம் செய்யவோ கூடாதென்று ஆண்கள் கூறினால் அவர்களை பெண்களை எதிர்ப்பவர்கள் என்று கருதி விட வேண்டாம்.
இந்த நாட்களில் பெண்களுக்கு தனி அறையும் படுக்கையும் அளித்திருந்த முன் தலைமுறை அந்நாட்களை அசுத்தத்தின் நாட்களாகக் கருதியி- ருந்தனர். இந்நாட்களில் பெண்கள் கோயில் தரிசனம் என்ன, வீட்டின் முன்பக்கம் வருவதும், தூய மூலிகைச் செடிகளின் பக்கம் வருவதும் கூட தடை செய்யப்பட்டு வந்தன. ஆண்களின் அருகாமையும் அனுமதித்- திருக்கவில்லை.
சபரிமலை போன்ற கோயில்களில் தரிசனத்துக்காக விரதம் பூண்டிருக்கும் ஆண்கள், வீட்டிலுள்ள பெண்களின் மாதவிடாய்க் காலத்தில் தங்கள் உணவை வீட்டிற்கு வெளியில் சுயமாக தயார் செய்து உண்பதும் வழக்கமாயிருந்தது.
மாதவிடாய்க் காலத்தில் பெண்களின் உடல் வெப்பம் மாற்றமடைகின்றது. இந்நேரங்களில் கோயில் தரிசனம் செய்தல் இந்த வெப்ப மாற்றம் காரணமாக தேவ பிம்பத்தையும் பாதிக்கும். ஜீவ சக்தி நிறைந்த தெய்வீகத்திலும் இந்த மாற்றம் நிகழாமலிருக்கவே மாதவிடா நாட்களில் பெண்கள் கோயிலுக்குள் நுழையலாகாது என்று கூறுவது.
பட்டுப்பூச்சிகளை வளர்க்குமிடத்தில் மாதவிடாய் கொண்ட பெண்கள் சென்றால் அதன் புழுக்கள் மாண்டு போவதாக விஞ்ஞானம் நிரூபித் திருக்கின்றது. அதாவது சிறு வெப்ப மாற்றமும் இப்புழுக்களை பாதிக்கின்றது என்று புரிந்து கொள்ளலாம். தன் உடலில் பட்டு நூலை உருவாக்கி வலைகள் உண்டாக்கி அதனுள் சமாதியிருக்கும் புழுக்களைப் போலவே கோயிலைப் பொறுத்தவரை இறையின் நிலையும். இவ்வாறு திவ்ய ஜீவ சக்தியை பாதிக்காமலிருக்கவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.