கர்ப்பவதி விரதம் ஆசரித்து வாழ வேண்டுமா ???

Update: 2024-06-18 10:10 GMT

கர்ப்பவதி விரதம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தான் கர்ப்பம் தரித்திருப்பதாக உணர்ந்த அன்று முதல் கர்ப்பவதி விரதங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பும்சவன சமஸ்காரம் கூறுகின்றது. இந்த கால அளவில் கர்ப்பவதியின் கணவனும் விரதம் கைக்கொள்ள வேண்டும்.

ஒரு நாள் நாம் சந்ததிக்காக பிரார்த்தனைகள் நடத்த வேண்டும் மேலும் கர்ப்பம் நிறைவு பெறும் வரை அவர்கள் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த விரதங்களை தவறாமல் ஆசரிப்போம் என்று பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் கர்ப்பம் ஒரு நல்ல சந்ததியில் நிறைவு பெறுவதற்காக இந்த விதிகள் ஆச்சரிக்க வேண்டிய கடமை தம்பதிகளுக்கு உண்டு.

கர்ப்பவதின் அன்றாட ஆசாரங்களிலும் பாதுகாப்பிலும் எப்போதும் கவனமாக இருப்பது கணவனின் கடமையாகும் காய், கனிகள் பல வகைகள் பால் நெய் என்பவை தினமும் நெல்லிக்கனி பிரம்மி என்பவை அடிக்கடியும் அருந்த வேண்டும் என்று முன்னோர்கள் போதித்திருந்தனர்.

இவை கருப்பத்தில் இருக்கும் சிசுவை சத்துடன் வளர்ச்சி அடையவும் அதன் புத்தி வளர்ச்சிக்கும் உதவும் என்று சாஸ்திரமும் ஒப்புக் கொள்கின்றது கூடவே கோபம் தூக்கம் மிதமிஞ்சு ஆசை போட்டி பொறாமை போன்றவை மனதில் உருவாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

புராண கதைகள் கேட்பதும் நல்ல பேச்சுகளில் ஈடுபடுவதும் நற்குணங்களை உடைய சந்ததியின் வளர்ச்சிக்கு உத்தமமானது என்பது பழமைவாதிகளும் புதுமைவாதிகளும் ஒரே போல் ஒப்புக்கொள்வார்கள்.

இளங்குவான உடற்பயிற்சி பழக்கப்படுத்துவது மிக அவசியம் இப்படியெல்லாம் பழகிக் கொள்ளும் பெண்ணில் பிறக்கும் சந்ததி நல்லதாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags:    

Similar News