சாணம் மிதித்தால் இனிப்பு கிடைக்குமா?

Update: 2024-08-27 10:30 GMT

சாணம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பண்டைக்காலத்தில் நம் கிராமங்களில் மிகப்பிரசித்தியடைந்த ஓர் நம்பிக்கை சாணம் மிதித்தால் இனிப்பு அருந்தலாம் என்று, இந்த நம்பிக்கை பின் தலைமுறையில் குழந்தைகளி டம் எட்டியபோது அவர்கள் இனிப்பருந்துவதற்காக மனப்பூர்வமாக சாணத்தை மிதக்கவும் முன் வந்தனர்.

குழந்தைகளின் இச்செயல் பெற்றோர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமுமிருந்து பலத்த கண்டனத்தையும் ஏற்படுத்தியது, அடியும் கிடைத்தது.

இந்த நம்பிக்கை 'சாணம் மிதித்தால் இனிப்பு என்பதிலிருந்து 'சாணம் மிதித்தால் அடி கிடைக்கும்' என்று மாறி வந்தது.

பண்டைக்காலத்தில் குருசீடர் உறவில், குழந்தைகளை கடினமாகத் தண்டிக்கும் அதிகாரம் குருமாருக்கு அளிக்கப்பட்டிருந்தது. நிறைந்த பயத்துடனும் ஆழ்ந்த பக்தியுடனும் குழந்தைகள் குருமாரை கண்டிருந்தனர்.

சாணம் மிதித்தால் அடி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மூழ்கியிருந்த சீடர்கள், தெரியாமலும் சாணத்தை மிதிக்காமல் கவனமாகச் சென்று வந்தனர். சாணம் மிதித்தவனைத் தொட்டாலும் அடி கிடைக்கும் என்றும் நம்பத்தொடங்கினர்.

இந்த விசுவாசத்தின் முதல் வடிவை நாம் அலசிப்பார்த்தோமானால் மிகப்பொருத்தமான ஓர் உண்மை தெரியவரும். 'சாணம் மிதித்தால் இனிப்பு கிடைக்கும்' என்பது 'எலும்பு முறிய வேலை செய்தால் பற்கள் முறிய சாப்பிடலாம்' என்பதும் ஏறத்தாழ ஒரே கருத்தை உணர்த்துகின்றன . அதாவது வயலில், சாணம் முதலியவை மிதித்து, கடினமாக உழைத்தால், இனிப்பு வகைகளுடன் நன்றாக உணவருந்தலாம் என்றே இந்த மூதுரை விளக்குகின்றது.

Tags:    

Similar News