இந்த ஆண்டின் முதல் தேய்பிறை ஏகாதசி
2024 ஆம் ஆண்டின் முதல்விரத நாளாக வருவது ஏகாதசி தான். மாதத்திற்கு இரண்டு என்ற விதத்தில் வருடத்திற்கு 24 ஏகாதசிகள் இருந்தாலும் வருடத்தில் ஆரம்பத்தில் வரும் ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏகாதசி மகாவிஷ்ணுவிற்குரிய முக்கியமான விரதங்கள் ஆகும் மார்கழி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு பௌஷகிருஷ்ண ஏகாதசி என்று பெயர் .இந்த ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்களின் துன்பங்கள் நீங்கி , அவர்கள் அனைத்து விதமான செல்வங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இன்று நாள் முழுவதும் ஏகாதசி திதி உள்ளதால் இது சர்வ ஏகாதசியாக கருதப்படுகிறது இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால்அஷ்வமேத யாகம் செய்த பலனும், பெருமாளின் அருளும், பரிபூரணமாக கிடைப்பதுடன் அனைத்து விதமான நலன்களையும் பெற முடியும். 2024 ஆம் ஆண்டில் முதல் ஏகாதசி வரும் ஞாயிற்றுக்கிழமை 07-ஆம் தேதி வருகிறது .ஜனவரி 6ஆம் தேதி இரவு 9:56 மணிக்கு துவங்கி ஜனவரி 7ஆம் தேதி இரவு 10 .10வரை ஏகாதசி திதி உள்ளது.