கார்ன் ப்ரிட்டர்ஸ் செய்வது எப்படி!

Update: 2024-08-22 13:30 GMT

கார்ன் ப்ரிட்டர்ஸ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேவையான பொருட்கள்:

ஃபிரெஷ் கார்ன் -1

முட்டை, சின்ன வெங்காயம் -தலா 2

ஆல் பர்பஸ் மாவு 1 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் பவுடர் (விரும்பினால்) -1/4 டீஸ்பூன்

பொடித்த மிளகு -1/2 டேபிள் ஸ்பூன்

பூண்டு 1 பல்

பச்சை மிளகாய் -1

பொடியாக நறுக்கிய சிவப்பு குடை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கொத்துமல்லித் தழை, உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கார்னை உதிர்த்து வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கொத்துமல்லித் தழையை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் பொடித்த மிளகு, உப்பு, பேக்கிங் பவுடர்சேர்த்து நன்குகலக்கவும். முட்டை கலவையில் குடை மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கார்ன், கொத்துமல்லித் தழை சேர்த்து கலக்கவும்.

அதனுடன் ஆல் பர்பஸ் மாவு சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் ஒவ்வொரு கரண்டியாக கார்ன் கலவையை விட்டு வேக வைக்கவும். இரண்டு பக்கமும் வேகவிட்டு, வெந்ததும் எடுக்கவும். சுவையான கார்ன் ப்ரிட்டர்ஸ் தயார்.

Tags:    

Similar News