சேலம் ராஜகணபதி கோவில் உண்டியலில் ரூ.13 லட்சம் காணிக்கை
சேலம் ராஜகணபதி கோவில் உண்டியலில் பக்தர்களின் காணிக்கை ரூ. 13 லட்சம்;
By : King 24x7 Website
Update: 2023-12-12 07:21 GMT
சேலம் ராஜகணபதி கோவில் உண்டியலில் பக்தர்களின் காணிக்கை ரூ. 13 லட்சம்
சேலத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் சங்கடகர சதுர்த்தி, பௌர்ணமி போன்ற நாட்களில் ஸ்ரீ ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு அன்றும் ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடக்கிறது. இந்த நாட்களில் திரளான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து ஸ்ரீ ராஜகணபதியை வணங்கி செல்கின்றனர். ராஜகணபதி ஆலயத்தில் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் கழித்து உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இதுபோல ராஜகணபதி ஆலயத்தில் இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த பணம் மற்றும் காசு, நகைகள் எண்ணம் பணி நடந்தது. இதில் சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு பணம் மற்றும் காசுகளை எண்ணினர். முடிவில் உண்டியலில் இருந்து 13 லட்சத்து 17 ஆயிரத்து இரண்டு ரூபாய் பணமும், ஒன்பது கிராம் தங்கம் மற்றும் 252 கிராம் வெள்ளி இருந்தது. இந்த பணம் மற்றும் நகைகள் அனைத்தையும் வங்கியில் டெபாசிட் செய்தனர்.