மகா புண்ணியத்தை தரும் சங்காபிஷேகம் வழிப்பாடு !!

Update: 2024-09-28 00:40 GMT

சங்காபிஷேகம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மாதங்களில் மிக முக்கியமானது கார்த்திகை மாதம். கார்த்திகை மாதமானது தீபங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாதமாகும்.

இத்தகையை சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்தில், சோமவாரம் என்று சொல்லக்கூடிய திங்கட்கிழமைகளில், சிவனுக்கு சங்காபிஷேகம் செய்வதில் இன்னும் பல புண்ணியங்கள் வந்து சேரும். கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவாலயங்களில் சங்காபிஷேக பூஜை விமரிசையாக நடைபெறும்.

சங்காபிஷேகம் செய்வதில் பல சாந்நித்தியங்களும் சடங்கு நியமங்களும் இருக்கின்றன. சிவனுக்கு 108 சங்கு அல்லது 1008 சங்கு கொண்டோ அபிஷேகம் செய்வது நன்மை தரும்.

எட்டுத் திசைகளைப் பார்த்தபடி அந்த சங்கில் இருந்து எட்டு சங்குகள் வைக்கவேண்டும். இப்படியாக வரிசையாகவும் ராசி குண்டங்களாகவும் வைக்கப்பட்டிருக்கும் சங்குகளுக்கு நடுவே, வலம்புரிச் சங்கையும் இடம்புரிச் சங்கையும் வைக்கவேண்டும். வலம்புரிச் சங்கு சிவன். இடம்புரிச் சங்கு பார்வதிதேவி என்கிறார்கள். இறைவன் ஒருவன், இறைவன் சிவன், இறைவனே ஆதி, இறைவனே அந்தம் என்பதாக சங்குகள் வைக்கப்படுகின்றன.

108 சங்குகளைக் கடந்து, எட்டுத் திசைக்கு எட்டு சங்குகள், வலம்புரி, இடம்புரிச் சங்குகள் என பத்து சங்குகள் சேர்த்து 118 சங்குகள் கொண்டும் அபிஷேக பூஜையைச் செய்யலாம்.

ஒவ்வொரு சங்கிலும் நீர் ஊற்ற வேண்டும். அந்த நீரில் பூக்களிட வேண்டும். மாவிலை, தெர்ப்பை கூர்ச்சம் ஆகியவற்றை மந்திர ஜபங்களுடன் வைக்க வேண்டும். சங்கு ,நீர் என்பதும் புனிதம். இரண்டையும் இணைத்து மந்திரம் சொல்லப்படும் போது சங்கும் நீரும் மிக மிகப் புனித நிலையை, ஓர் சாந்நித்தியத்தை அடைகின்றன.

சிவபெருமான் குளிர்ந்து போகிறான். இந்த பூமியைக் குளிரச் செய்கிறான். நம்மை குளிர்வித்து அருளுகிறான் என்பது ஐதீகம். இந்த சங்காபிஷேகத்தில் கலந்து கொள்வதால் வீடு, மனை, வாகனம், திருமணம், குழந்தை பிறப்பு போன்ற தடைகள் நீங்கும் என்பது காலம்காலமாக நம்பிக்கை.

Tags:    

Similar News