சோமநாதீஸ்வரர் திருக்கோயில் !!
சோமநாத சுவாமி கோயில் அல்லது 'சோமநாதீஸ்வரர் திருக்கோயில் என்றும் அழைக்கப்படும் சிவாலயம், இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில், கொளத்தூர் (சென்னை) பகுதியில் அமைந்துள்ளது.
800 ஆண்டுகள் தொன்மையானது இக்கோயில்.இக்கோயிலின் மூலவர் சோமநாதீஸ்வரர் ஆவார். தாயார் அமுதாம்பிகை ஆவார். இக்கோயிலின் விருட்சம் வில்வம் ஆகும். இக்கோயிலின் தீர்த்தங்கள் சந்திர தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம் ஆகும். இத்திருத்தலம் அமைந்துள்ள ஊர் முற்காலத்தில் 'திருக்குளந்தை' என்றும் 'திருக்குளத்தூர்' என்றும் அழைக்கப்பட்டு, பின் மருவி, 'கொளத்தூர்' என்று தற்போது அழைக்கப்படுகிறது.
இத்திருக்கோயில் சந்திரஸ்தலம் என்பதால் மனவளர்ச்சி குன்றியவர்களும் மன நிலை பாதிப்புள்ளவர்களும் இத்திருக்கோயில் மூலவரை வணங்கினால் நலம் பெறுவார்கள். சென்னையில் நவகிரக தலங்களில் இத்தலம் சந்திரனுக்குரிய தலமாக விளங்கி வருகிறது.