காலபைரவர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

சேத்திரபாலபுரம் காலபைரவர் கோவிலில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு

Update: 2023-12-06 06:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவனின் அம்சமாக கருதப்படும் பைரவர், கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி தினத்தன்று, தோன்றியதாக புராணம் கூறுகின்றது. சனியின் குருவாக போற்றப்படும், பைரவரை துதித்தால், ஏழரை சனி, அஷ்டம சனி, ஆகிய பாதிப்புகளில் இருந்து, நிவாரணம் பெறலாம், என ஜோதிடம் கூறுகின்றது. இன்று கார்த்திகை மாத தேய்பிறை, அஷ்டமியான பைரவாஷ்டமியை ,முன்னிட்டு, பைரவ சேத்திரமாக போற்றப்படும், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், தாலுக்கா சேத்திரபாலபுரம் கிராமத்தில் காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு அஷ்டமி, அன்றும் சிறப்பு பூஜைகள், நடைபெறுவது வழக்கம். பைரவர் ஜெயந்தி திருநாளான காா்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி தினமான இன்று, சேத்திரபாலபுரம் கோவிலில், சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. கடத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ,மற்றும் 16 வகையான திரவியங்களைக் கொண்டு, கால பைரவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவருக்குற் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ததுடன், தேங்காய், பாகற்காய், பூசணிக்காய்களில் தீபங்களை ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Tags:    

Similar News