திருஷ்டிப்பட்டவர்களில் ஏற்படும் மாற்றங்கள் - அதனை கழிக்கும் முறைகள் !!
திருஷ்டிப்பட்டவர்கள் :
திருஷ்டிப்பட்டவர் என எந்த விஷயங்களை பார்த்து உறுதி செய்வது முதலில் உடலில் அசதி உண்டாகும். தூக்கம் அதிகமாகலாம் சப்பாடு பிடிக்காமல் போகலாம். அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இருந்த விஷயங்கள் எல்லாம் கை நழுவிப் போகும், அடிக்கடி கொட்டாவி வரும். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. ஏதாவது புது உடை அணிந்தால் அது கிழியலாம். சில சமயம் அதில் ஏதாவது கருப்புக்கறை படலாம். வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும்.
திருஷ்டி கழிக்கும் முறைகள் :
அமாவாசை, பவுர்ணமி போன்ற முக்கிய தினங்களில் உச்சிவேளையில் வீட்டிற்கு திருஷ்டி கழிக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்கு திருஷ்டி கழிக்கலாம்.கடல் நீரை கொண்டு வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் விலகும். எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின் மேல் குங்குமம் பூசி திருஷ்டி சுற்றி வீசி எறியலாம்.செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் பூசணிக்காயை வைத்து வீட்டில் திருஷ்டி சுற்றி போடலாம்.கோமாதா வீட்டிற்குள் வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அது போல திருஷ்டி இருக்கும் வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பசுவை வீட்டிற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷங்களும், திருஷ்டிகளும் நீங்கும்.