சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு கோவிந்தா.. கோவிந்தா என முழக்கமிட்ட பக்தர்கள் !!

Update: 2025-01-10 09:04 GMT

spritual

சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு திருமலையே விழாக்கோலமாக காட்சியளித்தது. கோயில் வளாகம் முழுவதும் பல்வேறு வகையான மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட வைணவத் தலங்களில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு வைபவங்கள் நடைபெற்றன.

பூலோக சொர்க்கம் என்றழைக்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பையொட்டி கண்கவர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை 12.45 மணிக்கு ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சொர்க்கவாசலில் பிரவேசித்து எழுந்தருளினார்.

அப்போது பக்தர்கள் 'கோவிந்தா.. கோவிந்தா' என பக்தி முழக்கம் எழுப்பினர். பக்தர்கள் ஒரே நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து விட்டு சொர்க்க வாசல் வழியாக சென்றதை பாக்கியமாகக் கருதி சென்றனர்.

Tags:    

Similar News