திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு உகந்த நேரம் !!
ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை கோவில் நிர்வாகம், பௌர்ணமி நாளில் எப்போது கிரிவலம் செல்ல வேண்டும் கிரிவலம் செல்வதற்கான தொடக்க நேரம் மற்றும் முடியும் நேரம் பற்றிய தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.
2024 புரட்டாசி மாதம் பௌர்ணமி திதி, புதன்கிழமை அக்டோபர் 16 அன்று துவங்கி, வியாழன் அக்டோபர் 17 அன்று முடிகிறது.
பஞ்சபூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமான, உலகப் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில், ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள்.
பௌர்ணமி நாட்களில் மட்டும் இல்லமால், விடுமுறை நாட்களிலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்கும், கிரிவலம் வருவதற்கும் பலவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இது கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிரிவலம் வரலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.