மணிமகுடத்தின் வைரமாக ஜொலிக்கும் மலைகோட்டை உச்சிப்பிள்ளையார்!
திருச்சியின் மணி மகுடம் மலைக்கோட்டை என்றால் மணிமகுடத்தின் வைரமாக ஜொலிப்பவர் உச்சிப்பிள்ளையார் உச்சி விநாயகர் சன்னதி சுமார் 272 அடி உயரத்தில் அமைந்துள்ளது இதன் அடிவாரத்தில் இருந்து உச்சி விநாயகர் சன்னதி வரை 417 படிகள் உள்ளன இந்த சன்னதியில் இருந்து திருச்சி மாநகரின் முழு தோற்றத்தையும் வைணவ தலங்களுள் முதன்மையான ஸ்ரீரங்கத்தையும் சிவ தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் முதலான திருக்கோவில்களையும் காவிரி ஆறு உள்ளிட்ட திருச்சி மாநகரின் எழிலான தோற்றத்தையும் கண்டு ரசிக்கலாம் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் முடிந்ததும் விபீஷணர் இலங்கைக்கு திரும்பிய போது ஸ்ரீராமர் தனது மூதாதையர் வழிபட்ட அரங்கநாதரின் சிலையை பரிசாக அளித்து அதனை பூமியில் வைக்கும் இடத்தில் பதிந்துவிடும் என்பதையும் தெரிவித்தார் விபீஷணர் அதனை இலங்கையில் வைக்க விரும்பி செல்லும் வழியில் காவிரியில் நீராடி பூஜை செய்ய விரும்பினார் ஆனால் அரங்கநாதர் திருச்சியில் இருக்க வேண்டும் என நினைத்து விநாயகர் சிறுவனாக வடிவெடுத்து விபீஷனர் முன் தோன்ற விபீஷனர் அவரிடம் அந்த சிலையை கொடுத்துவிட்டு நேராக சென்றார் மூன்று முறை விபீஷணரை அழைத்துவிட்டு பூமியில் அரங்கநாதரை வைத்துவிட்டு ஓடினார் பின்னர் அரங்கநாதரை எடுக்க முயன்ற விநாயகர் இயலாமல் போகவே சிறுவனை துரத்தி சென்று தலையில் கொட்டினார் சிறுவன் விநாயகராக காட்சி அளித்ததும் விபீஷனர் திகைத்தார் . தற்போதும் உச்சி விநாயகர் தலையில் 4- அங்குல ஆழமுள்ள விபீஸனரால் குட்டுப்பட்ட பள்ளம் உள்ளது என்ற வரலாறு உண்டு . அனுமன் இத்தலத்தை பூசித்ததற்கு அடையாளமாக அனுமக்கொடியும் அனுமமுத்திரையும் இக் கோயில்களுக்கு உரியனவாக உள்ளன திருவருட்கவி பாடுவதில் சிறந்தவரான தாயுமானவர் இந்த ஊரைச் சேர்ந்தவர்.