விஷ்ணு பூஜைக்குள்ள பூக்கள் எவை?

Update: 2024-07-26 10:05 GMT

பூக்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விஷ்ணு பூஜைக்குள்ள பூக்களைப்பற்றி, கோயில் ஆசார இரகசியங்களில் கூறப்பட்டிருக் கின்றது. விஷ்ணு பூஜைக்கு ஏதாவது பூக்கள் போதாதா என்று கேட்கலாம். அது போதாது என்றே கூற வேண்டும். கிருஷ்ண துளசி, ராமதுளசி, வெள்ளைத்தாமரை, செந்தாமரை, பிச்சகம், ஜமந்தி, முல்லை, காக்கத்தி முல்லை; நாகம், காட்டு செண்பகம், நந்தியார் வட்டம், மூக்குத்தி, செம்பருத்தி, நொச்சிமல்லிகை, செண்பகம், குவளை, நீலத்தாமரை, கைதை, புதுமுல்லை, சிவப்பு முல்லை என்ற பூக்கள் விஷ்ணு பூஜைக்கு உத்தமமான பூக்கள். வெறும் தேவபூஜைக்கு எடுக்கும் பூக்களாக இவற்றை காண வேண்டியதில்லை. இவற்றின் மருத்துவகுணங்களைப்பற்றியும் இவை சுவாசித்தால் பெறும் பயன்களைப்பற்றியும் மருத்துவநூல் வெளிப்படுத்துகின்றது. 

Tags:    

Similar News