கர்ப்பிணிக்கு நீதிக் கதைகள் சொல்லிக் கொடுப்பது எதற்காக?

Update: 2024-09-05 09:36 GMT

கர்ப்பிணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கர்ப்பவதிகட்கு நீதிக்கதைகள் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற மூதுரை மருத்துவத்துறையும் முழுதாக அங்கீகரித்துள்ளது.

முற்காலத்தில் கர்ப்பவதிகளான பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஆசாரங்கள் விதித்திரு- ந்தனர் அதில் மிகமுக்கியமாகக் கூறப்பட்டிருந்தது. நீதிக்கதைகள் வாசிப்பதும் கேட்பதும் நீதிக்- கதைகள் கர்ப்பிணிகட்கு சொல்லிக் கொடுப்பதில் பாட்டிமார் தனிப்பட்ட கவனம் செலுத்தியிருந்தனர்.

கர்ப்பிணிகள் கேட்ட கதைகள் கருவிலிருக்கும் சிசு உட்கொண்டதான கதைகளும் நம்நாட்டிலுண்டு.

கர்ப்பக் காலத்தில் நன்மையுடையதும் நீதியுடையதுமான கதைகள் கேட்பதன் விளைவாக அப்பெண் மகிழ்வுற்றிருப்பாள். இந்த காலகட்டத்தில் மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதும் சிக்கல்களில்லா ததுமான உரையாடல்கள் கேட்க வேண்டும் என்று நவீன சாஸ்திரம் கூறுகின்றது.அது மட்டுமல்ல கோபமுண்டாக்கக் கூடிய பேச்சுக்கள் கேட்கலாகாது என்றும் கூறுகின்றது.

பும்சவன சமஸ்காரம் என்ற பேரில் முற்காலத்து மக்கள் ஆசரித்து வந்த ஓர் சடங்கின் பாகமாகவே நீதிக்கதைகள் கர்ப்பிணிகளைக் கேட்கச் செய்திருந்தனர். நன்மார்க்க சிந்தனைகளுடன் மாசற்று வாழும் ஒரு கர்ப்பிணிக்குப் பிறக்கும் சந்ததி நற்குணங்களுடன் விளங்கும் என்ற நம்பிக்கையை நவீன சாஸ்திரமும் அங்கீகரிக்- கின்றது. முன் கோபத்துடனும் அங்காரியாகவும், நன்மார்க்க சிந்தனைகளில்லாமல் வாழ்பவள் பெற்றெடுக்கும் சந்ததி நற்குணங்களை உடையதாக இருக்காது என்பது நிஜம் மன - நிம்மதியும் திருப்தியும் நிறைந்த கர்ப்பிணிக்கு நல்ல குழந்தையைப் பெற்றெடுக்க இயலும்.

இதற்காகவே முன்னோர்கள் இத்தகைய ஆசாரங்களை அங்கீகரித்திருந்தனர்.

Tags:    

Similar News