வித்யாரம்பம் எதற்காக?

Update: 2024-07-13 09:22 GMT

வித்யாரம்பம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அறிவு சம்பாதிக்கும் தகுதியளிக்கும் உபநயனம் கழிந்ததும் அடுத்த நாள் முதல் ஒரு வருடத்துக்குள் ஏதாவது ஒரு நாள் கல்வியாரம்பம் குறிக்கலாம்.

வாழ்க்கையில் மிகச்சிறப்பான ஒரு சடங்காக இதைக் கருதுகின்றனர். இந்த சடங்கை வித்யாரம்பசம்ஸ்காரம் குறிப்பிடுகின்ற அதே படி அல்லாவிட்டாலும் ஏறத்தாழ அது இப்போதும் நடக்கின்றது. இதில் முன்பு கண்டிருந்த ஜாதி மத வேறுபாட்டு எல்லைகள் இப்போது மாய்ந்து விட்டன. இந்தச்சடங்கின் முக்கிய குறிக்கோள் இப்போது பலருக்கும் வெளிப்பட்டுள்ளது.

கல்வி ஆரம்பமாகும் நாளில் அதிகாலையில் குழந்தையைக் குளிக்க வைத்து புத்தாடை அணிந்து பெற்றோர்கள் குழந்தையை பூஜைக்காக அமர்ந்திருக்கும் ஆசாரியருக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டும். மனதில் இறைவனை நினைத்துக் கொள்ள குழந்தையிடம் கூற வேண்டும். பின் பூஜை பீடத்தை வலம் வந்து ஆசாரியருக்கு முன், கிழக்கு நோக்கி ஒளிரும் சூரியனின் கதிர்களை பார்த்த வண்ணம் அமரச் செய்ய வேண்டும்.

ஆசாரியருக்கு முகத்தோடு முகமிருந்து குழந்தை கீழ்க்கண்டவாறு வேண்டிக் கொள்ள வேண்டும் "எல்லா அறிவுகளும் எனக்களிக்க ஆர்வமுள்ள மகா குரு, இறைவன் சொரூபமான ஓம் காரமும், மகாவியாகுருதியும், காயத்ரியும் சேர்ந்த அந்த புனிதமான மந்திரத்தின் ஓசையை எனக்குள் சொரியும்."

இதைக் கேட்கும் குரு, கைவணங்கி- யிருக்கும் குழந்தைக்கு அந்த மந்திரங்களை சொல்லுகின்றார் அன்று முதல், குருவும் சீடனும் ஒரு நெருங்கிய உறவுக்குள்ளாகின்றனர். இதற்காக குழந்தை கைக் கொள்ள வேண்டிய நல்ல தத்துவங்கள் எவையெல்லாம் என்று பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் குரு போதித்த- ளிக்கின்றார்.

குருவின் சொற்களை மரியாதையுடனும், ஒழுங்குமுறையுடனும் கேட்டிருக்கும் குழந்தை அதன்பின் குரு காணிக்கை வழங்கி, காலில் தொட்டு வணங்கிய பின் அங்கிருந்து எழலாம்.

Tags:    

Similar News