இளம் கலைஞர்களை ஊக்குவிக்க இயல் இசை நாடக மன்றம் திட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

இளம் கலைஞர்களை ஊக்குவிக்க இயல் இசை நாடக மன்றம் திட்டமிட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.;

Update: 2025-07-09 12:12 GMT

Tn govt

இளம் கலைஞர்களை ஊக்குவிக்க இயல் இசை நாடக மன்றம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தகுதிவாய்ந்த இளம் கலைஞர்களுக்குக் கலை நிறுவனங்களில் வாயிலாகக் கலை நிகழ்ச்சிகள் நடத்திட வாய்ப்புகள் வழங்கும் திட்டத்தின்கீழ், இளம் கலைஞர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு தமிழகத்தில் சிறப்புடன் செயல்படும் கலை நிறுவனங்களில் வாயிலாகத் தலா மூன்று கலை நிகழ்ச்சிகள் நடத்திட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இக்கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்திட கலை நிறுவனங்களுக்கு நிதியுதவியும், கலைஞர்களுக்கு மதிப்பூதியமும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்கீழ் குரலிசை கலைஞர்கள் பா. ஹரிப்பிரியா, கி. மீரா, பி. மதுஸ்ரீ, ப்ரீத்தி சேதுராமன், சமன்விதா ஜி. சாசிதரன், செல்வி. லாவண்யா, எஸ். ஸ்வராத்மிகா, நந்திதா கண்ணன், வெ. கன்யாகுமரி, சாய் பிரதர்ஸ், வி. கிருஷ்ண சாய், வி. முகுந்த சாய் ஆகிய கலைஞர்கள் தேர்வு செய்யபப்ட்டுள்ளனர். தனி வயலின் கலைஞர்கள் முகுந்தன் சாம்ராஜ், ஆர். ஸ்ரீ கிருதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சாக்ஸபோன் கலைஞர் டி.ஜி.என். திருவருள் தேர்வு செய்யப்பட்டார். கதாகலட்சேபம் கலைஞர் ஹ. அனன்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாதஸ்வரம் கலைஞர்கள் S. கேசவராஜ், G. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பக்கவாத்தியம் வயலின் கலைஞர் மா. கோகுல கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். மிருதங்க கலைஞர்கள் ச. முத்துகுமரன், ஹ. அபினவ் சங்கர், எஸ். விக்னேஷ், ஜஸ்வர்யா, அநிருத். ஸ்ரீ, லட்சுமண். ஆர், கி. சாய் பிரசாத், ராம்ஸ்மரண் கிருஷ்ணகுமார், என். ராமகிருஷ்ணன், சஞ்சய் வேதாந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கஞ்சிரா கலைஞர் வி. முகுந்தசாய் தேர்வு செய்யப்பட்டார். கடம் கலைஞர் தி. ஆனந்த்மகராஜ் தேர்வு செய்யப்பட்டார். பரதநாட்டியக் கலைஞர்கள் கீர்த்தனா சுப்பிரமணியன், சூர்ய கலா. ஆ, வைஷ்ணவி ஸ்ரீநிவாசன், கோ. ஜாஹ்னவி, ம. அஷயா ஸ்ரீலலிதா, மானாசா ஸ்ரீராம், வைஷாலி, சஹானா சுகுமார், ஆர். வனமாலிகா, ஹேமாவதி கலையரசன், சாத்விகா கோபிநாதன், எஸ். மௌமிதா, ஷித்திகா பி. நாயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கிராமியக் கலைஞர்கள் எம். சங்கீத் ஸ்ரீராம் – பொம்மலாட்டம், கு. ஜெயபிரசாத் -ஓயிலாட்டம், பா. கணபதி – ஓயிலாட்டம், வெ. விக்னேஷ் – கைசிலம்பம், சு. பிரபு – கைசிலம்பம், சு. வி. இரமணன் – கரகம் தேர்வு செய்யப்பட்டனர்.

Similar News