வார இறுதியில் இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.;

Update: 2025-08-09 06:35 GMT

தங்கம் 

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி உயர்வு, ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஈரான் போர் உள்ளிட்ட உலக நாடுகளில் நிகழும் அசாதாரண சூழல், டாலருக்கு நிகராண இந்தியா ரூபாயின் மதிப்பு ஆகியவை காரணமாக தங்கம் விலை அதிரடியாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. அதிலும் இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதுமே மவுசு அதிகம் தான். உலகளவில் தங்கம் சிறந்த சேமிப்பாகவும், சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுவதால் அதன் விலை கணிசமாக ஏற்றம் கண்டு வருகிறது. அந்தவகையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டி, ரூ.75,760க்கும், ஒரு கிராம் ரூ.9,470க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.75,560க்கும், கிராம் ரூ.40 குறைந்து.9,445க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.127 ஆக விற்கப்படுகிறது. 

Similar News