தூய்மை பணியாளர்களுக்கு எப்போதும் பணிப் பாதுகாப்பு உள்ளது: மேயர் பிரியா
சென்னையில் போராடிவரும் தூய்மை பணியாளர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.;
priya
சென்னையில் போராடிவரும் தூய்மை பணியாளர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, “தூய்மை பணியாளர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். தூய்மை பணியாளர்களுக்கு எப்போதும் பணிப் பாதுகாப்பு உள்ளது. பல்வேறு சலுகைகளையும் அவர்களுக்கு அளிக்கிறோம். ஆகஸ்ட் 31க்குள் பணிக்கு திரும்பும் படி கோரியுள்ளோம். முதலில் பணிக்கு திரும்பட்டும். பிற கோரிக்கைகளை பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம். பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் முன்வைத்தனர். தூய்மை பணியாளர்களுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பணியில் பாதுகாப்பு இருக்கிறது. பல்வேறு சலுகைகளும் உள்ளன. அவர்கள் பணியில் சேர வேண்டும். பிற கோரிக்கைகள் குறித்து ஒரே நாளில் முடிவு எடுக்க முடியாது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம் என்றார்.