சற்று இறங்கிய தங்கம் விலை.. புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை!!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதேநேரம் வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.;

Update: 2025-08-25 12:57 GMT

gold

உலகளவில் தங்கம் சிறந்த சேமிப்பாகவும், சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுவதால் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கேற்ப தங்கம் விலையும் அதிரடியாக ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. சென்னையில் கடந்த 19ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ.73,880க்கும், ஒரு கிராம் ரூ.9,235க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆக 20 ம் தேதி தங்க விலை மீண்டும் சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.73,440க்கும், கிராம் ரூ.9,180க்கும் விற்பனையானது. இதனையடித்து 10 நாட்களுக்குப் பிறகு ஆக 21 தங்க விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.73,840க்கும், கிராம் ரூ. 9,230க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் ஆக.22 ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.73,840க்கும், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,215க்கு விற்பனையானது. தொடர்ந்து ஆக. 23 அன்று சென்னையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் மீண்டும் 74 ஆயிரத்தை தாண்டி ஒரு சவரன் ரூ.74,520க்கும், ஒரு கிராம் ரூ.9,315க்கு விற்பனையானது. அன்றைய தினம் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.130 என்கிற புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று இறக்கம் காட்டியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ. 74,440க்கு விற்பனையாகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ10 குறைந்து ஒரு கிராம் 9,305 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேநேரம் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மீண்டும் 1 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 131க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

Similar News