மக்களுக்கு அடுத்த ஷாக்..! டீ காபி விலை உயர்கிறது..!

இன்று முதல் டீ மற்றும் காபியின் விலை உயர்த்தப்படுவதாக டீக்கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.;

Update: 2025-09-01 04:38 GMT

tea

இன்று முதல் டீ மற்றும் காபியின் விலை உயர்த்தப்படுவதாக டீக்கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிளாஸ் டீயின் விலை ரூ.12-ல் இருந்து ரூ.15 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும் ஒரு கிளாஸ் காபியின் விலை ரூ.15-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படுகிறது.இந்த புதிய விலைப்பட்டியல் இன்று முதல் அமுலுக்கு வருகிறது என்றும், இது தொடர்பான அறிவிப்புகள் சென்னையின் பல்வேறு டீக்கடைகளில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் பத்து அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கோப்பை தேநீரின் விலை இரண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை இருந்தது. அதன் பிறகு படிப்படியாக பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் விலை உயர்த்தப்பட்டு 12 ரூபாய்க்கு தேநீர் விற்பனை செய்யப்பட்டு ஒரு கோப்பை காப்பி 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. பால், டீ தூள், காபி தூள் ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதாலும் இந்த விலை உயர்வை மேற்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று டீக்கடை வியாபாரிகள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் டீ கடைகளில் ஒட்டப்பட்டுள்ள புதிய விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கடைசியாக 2022ஆம் ஆண்டு தேநீர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ரூபாயாகவும், காபி விலை 12 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News