கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம்: எஃப்ஐஆரில் பரபரப்பு தகவல்

கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக காவல்துறை எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ள பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2025-09-29 11:29 GMT

vijay

கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக காவல்துறை எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ள பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதில், “அரசியல் பலத்தை காட்ட திட்டமிட்டு 4 மணி நேரம் தாம‌தம். மரங்களிலும், கடை கொட்டகைகளிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர். மரக்கிளை முறிந்த‌தால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர். ஆகையால் அங்கு அசாதாரண சூழல். ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரிடம் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை, நீண்ட நேரம் காத்திருப்பு, தண்ணீர், மருத்துவ வசதி இல்லை. கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அழுத்த‌த்தால் மக்கள் உடல் நிலை சோர்வடைந்தனர். கீழே விழுந்தவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். கரூரில் கூட்டத்தை அதிகரிக்கவே தவெக தலைவர் விஜய் வேண்டுமென்றே தாமதமாக வந்தார். தனது அரசியல் பலத்தை பறைசாற்ற, கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் வேண்டுமென்றே காலதாமதமாக வந்தார். அசாதாரண சூழலை எச்சரித்தும் தவெக பொதுச்செயலர் என்.ஆனந்த் அதனை காதில் வாங்கவில்லை. நெரிசல் அதிகரித்ததால் உயிர் சேதம் ஏற்படுமென எச்சரித்தும் நிர்வாகிகள் கேட்கவில்லை,கரூரில் விஜய் அனுமதியின்றி சாலைவலம் சென்றார். நிபந்தனைகளை மீறியும் கால தாமதம் செய்தும் இடையூறு ஏற்படுத்தினர். முனியப்பன் கோவில் ஜங்ஷனில் ராங்ரூட்டில் வாகனங்களை ஓட்டி நெருக்கடி ஏற்படுத்தினர். கரூருக்கு வர விஜய் 4 மணி நேரம் தாமதப்படுத்தினார்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Similar News