தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்தது!!
சென்னையில் இன்று மாலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.;
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது. ஜனவரி 7-ஆம் தேதியான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.1,02,960க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், காலை அதிகரித்த தங்கம் விலை மாலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று மாலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 70 குறைந்து ரூ. 12, 800க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் நேற்று மாலை வெள்ளி கிலோவுக்கு ரூ.6,000 குறைந்து ரூ.2,77,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று (ஜன.8) தங்கம் விலை குறைந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.12,750க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,02,000க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.272க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,72,000க்கும் விற்பனையாகிறது.