பொங்கல் திருநாளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்தது!!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.;
கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் கூட இப்போது வரை தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தாண்டாவது விலை குறையும் என நம்பியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி, தங்கம், வெள்ளி விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.307-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று (ஜன.15) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.13,290க்கும், ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 1,06,400க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை வரலாறு காணாத வகையில், கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.310க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.3,10,000க்கும் விற்பனையாகிறது.