ஒரே நாளில் 2 முறை உயர்ந்தது தங்கம்..!

தங்கம் விலை ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்துள்ளது.;

Update: 2025-11-06 12:18 GMT

Gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,320க்கு விற்பனையாகிறது. காலையில் ஒரு சவரன் ரூ.560 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.560 அதிகரித்துள்ளது. உலக நாடுகள் அனைத்துமே தங்கத்தை டன் கணக்கில் வாங்கி குவிக்கின்றன. சீனாவில் 2200 டன் இருந்த சீனா இன்று தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகிறது. உலக நாடுகள் அனைத்துமே பொருளாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக தங்கத்தை அதிக அளவு வாங்கி வருகின்றனர். இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு விலை அதிகரித்து வருகிறது. தங்கம் விலை இறங்குவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை எனக் கூறப்படுகிறது.

Similar News