தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: மார்ச் முதல் வாரத்தில் தேதி அறிவிப்பு?

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2026-01-08 05:48 GMT

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் திருத்தப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் பட்டியல் வெளியான பிறகு, பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு தமிழகம் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் பாதுகாப்பு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள். சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் தமிழகம் வரும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் மே 10, 2026 அன்று முடிவடைகிறது. அதற்கு முன்பாக புதிய அரசு அமைய வேண்டும். பொதுவாக ஏப்ரல் மாதக் கோடை விடுமுறை மற்றும் தேர்வுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தேதிகள் நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News