கரூர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசல் ; பலி எண்ணிக்கை உயர்வு!!
கரூர் துயர சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.;
By : King 24x7 Desk
Update: 2025-09-28 08:44 GMT
karur stampede
விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி உயர்வு 38 ஆக உயர்ந்துள்ளது. 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 பேர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் அணி வகுத்தபடி செல்லும் காட்சிகள் காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது.