கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து: 5 மாணவர்கள் காயம்!!

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பள்ளி பேருந்தில் இருந்த 5 மாணவர்கள் காயமடைந்தனர்.;

Update: 2025-07-28 07:47 GMT

accident

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகர பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களை ஏற்றுவதற்காக அந்த பள்ளியின் தனியார் பேருந்து ஒன்று இன்று உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர்கள்ளை ஏற்றி கொண்டு பெட்ரோல் பங்க் அருகில் உள்ள வளைவில் திரும்ப முயற்சித்து உள்ளன. அப்போது அந்த வழியாக விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த ஒரு லாரி எதிர்பாரத விதமாக பள்ளி வாகனத்தின் மீது மோதியது அந்த பள்ளி பேருந்துயில் 7 மாணவர்கள் சென்று உள்ளன இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்கள் அனைவரும் உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த விபத்தினால் அந்த பள்ளி பேருந்து ஒரு பகுதி கண்ணாடி முழுவதும் உடைந்து சேதம் அடைந்ததால் மாணவர்கள் அச்சம் அடைந்தனர். தற்போது 5 மாணவர்களும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி பேருந்துயின் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 5, 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெற்றோர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

Similar News