கரூர் நெரிசல் வழக்கை விசாரிக்க கூடுதலாக 8 அதிகாரிகள்!!
கரூர் நெரிசல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனய்வுக் குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.;
By : King 24x7 Desk
Update: 2025-10-06 07:59 GMT
karur stamepede
கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக கூறி 25 பேர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்க்கப் பட்டுள்ளனர். ஏற்கெனவே நாமக்கல் எஸ்பி விமலா, சிவில் சப்ளை சிஐடி எஸ்பி சியாமளா தேவி குழுவில் உள்ளனர். மேலும், இக்குழுவில் டி.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி, ஆய்வாளர்கள் என 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.