திருச்செந்தூரில் ஆனி குபேர பௌர்ணமி பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆனி குபேர பௌர்ணமி முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆனி குபேர பௌர்ணமி முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலானது அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். மேலும் இந்த கோவில் கடற்கரை பகுதியில் அமைந்திருப்பதால் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை திருவிழா காலங்களில் தவிர்த்து அதிகரித்து வருகிறது.
எந்த நிலையில் பௌர்ணமி தினத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் கடல் ஆரத்தி எடுத்து சமுத்திர அபிஷேகத்தில் கலந்து கொண்டு இரவு கடற்கரையில் தங்கி அதிகாலையில் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். இதனால் தமிழகம் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்களும் பௌர்ணமி தினத்தில் கோவிலில் குவிந்து வருகின்றனர். இன்று ஆனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி குபேர பௌர்ணமியாக கருதப்படுவதால் இந்த பௌர்ணமி தினத்தில் வழிபாடு நடத்தினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது கருதப்படுகிறது.
இதனால் கோவில் கடற்கரையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேலும் கோவில் கடலுக்கு சமுத்திர அபிஷேகம் ஆரத்தி எடுத்து வழிபட்ட பின் கோவில் கடற்கரையில் இரவு முழுவதும் தங்கி பௌர்ணமி நிலவை வழிபட்டு காலையில் எழுந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய உள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் பொருத்தமட்டில் சூரசம்கார நிகழ்வில் மட்டுமே லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூய்வது வழக்கம். ஆனால் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்திருப்பது வரலாற்று சாதனையாக பேசப்படுகிறது.