விழுப்புரத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு!!

விழுப்புரத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2024-12-02 09:20 GMT

Chennai to Trichy National Highway

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. இதுமட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டி உள்ள ஏரிகள் நிரம்பியதால் வெளியேறிய தண்ணீரால் அப்பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசூர் பகுதியில் விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போக்குவரத்து பாதிப்பு காரணமாக மாற்றுவழியில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி வரக்கூடிய தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டி உள்ள ஏரிகள் நிரம்பியதால் வெளியேறிய தண்ணீரால் அப்பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசூர் பகுதியில் விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதேப்போன்று, சென்னைக்கு செல்லக்கூடிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Tags:    

Similar News