நிவாரண முகாம்களில் அனைத்தும் தயார் நிலையில் இருக்கவேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நிவாரண முகாம்களில் அனைத்தும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.;

Update: 2024-11-26 11:57 GMT
நிவாரண முகாம்களில் அனைத்தும் தயார் நிலையில் இருக்கவேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின் 

  • whatsapp icon

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆறு மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். மின் விநியோகம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ள நீர் தேங்கும் பட்சத்தில் பயிர்கள் சேதம் அடைவதைத் தடுக்க நடவடிக்கை அவசியம். நிவாரண முகாம்களில் அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். முன்கூட்டியே மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

Tags:    

Similar News