ரேசில் முந்தும் மேயர்: குடைச்சல் கொடுக்கும் எம்எல்ஏ... தஞ்சை திமுகவில் நடப்பது என்ன?
தஞ்சை மேயர் சண். இராமநாதனுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில் திமுக எம்.எல்.ஏ. செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.;
tanjore mla and mayor
தஞ்சை மாநகர திமுக செயலாளராக இருந்த டிகேஜி நீலமேகம் , கடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வாக தேர்வானார். தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த சண்.ராமநாதன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு பேருக்கும் எம்.எல்.ஏ மற்றும் மேயர் என இரு பதவிகள் கிடைத்தாலும் , தலைமை முடிவு செய்து டிகேஜி நீலமேகம் வசம் இருந்த தஞ்சை மாநகர செயலாளர் என்ற கட்சி பதவியை பறித்து சண்.ராமநாதன் வசம் வழங்கியது. அப்போதில் இருந்தே இருதரப்பு ஆட்களுக்கும் யார் பெரியவர் என்ற யுத்தம் துவங்கியது. மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட சண்.ராமநாதனை பொறுத்தவரை , மக்களால் எந்த நேரமும் அனுகக்கூடிய நபராகவும் , பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக சரிசெய்யக்கூடிய நபராகவும் தஞ்சாவூரில் அறியப்படுகிறார். தஞ்சாவூர் மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் உள்ள 51 வார்டுகளில் திமுக மட்டும் தனித்து 36 வார்டுகளில் வெற்றிபெற்று தனிப்பெருமபான்மையுடன் மேயர் பதவியை கைப்பற்றியதால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதிலும் மேயர் ஆர்வம் காட்டி வருகிறார். மேயராக மட்டும் அல்லாது , தஞ்சாவூர் மாநகர செயலாளர் என்ற பதவி மூலமாகவும் , தஞ்சாவூர் மாநகர திமுக வினரையும் அனுசரித்து பணி செய்து வரும் சண்.ராமநாதனுக்கு , டிகேஜி நீலமேகம் சமீபத்திய நாட்களில் அவருடைய ஆதரவாளர்களை வைத்து நெருக்கடி கொடுத்து வருவதாக கூறுகின்றனர். தஞ்சை திமுக வினர். முதல்வர், துணை முதல்வர் வருகையின் போது கட்சியினரை ஒருங்கிணைத்து இவர் அளித்த வரவேற்பில் தலைமை மகிழ்ச்சியாக உள்ளதாகவும் , வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் மேயராக இருக்கும் சண்.ராமநாதனுக்கு தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தேர்வாகும் ரேசில் முதலிடத்தில் இருக்கிறார். இதன் காரணமாக ஏற்கனவே இருந்த மாநகர செயலாளர் என்ற பதவியும் இல்லாத நிலையில் , தற்போது எம்.எல்.ஏ சீட்டும் பறி போய்விடுமோ என்ற அச்சத்தில் டிகேஜி நீலமேகம் அவருடைய ஆதரவாளர்களை வைத்து மாநகராட்சியில் குழப்பம் ஏற்படுத்த முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த மாமன்றக் கூட்டத்தில் கூட டிகேஜி நீலமேகம் தன்னுடைய ஆதரவு மாமன்ற உறுப்பினர்களை வைத்து சண். இராமநாதனுக்கு அவர்களுக்கு எதிராக செயல்பட வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும், அனைத்தையும் சரியான முறையில் சமாளித்து தலைமை கூறும் கட்சி பணிகளையும் , மேயராக மக்கள் பணிகளையும் சண்.ராமநாதன் செய்வார் என்றே அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.