50 வயதுக்கு மேற்பட்டோர் நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை அவசியம்... மருத்துவர் சரவணன் ராஜமாணிக்கம் அறிவுறுத்தல்!!
50 வயதுக்கு மேற்பட்டோர் நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை அவசியம் என மருத்துவர் சரவணன் ராஜமாணிக்கம் அறிவுறுத்தியுள்ளார்.
நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தங்கம் மருத்துவமனையில்புற்று நோய்க்கான சிகிச்சை பெறும் ஏழை எளியவர்களுக்கு உதவிடும் தன்னார்வலர்களுக்கு பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் உள்ள அரங்கில் நடைபெற்றது. தங்கம் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனரும் மருத்துவர் விமான இரா.குழந்தைவேல் தலைமை தாங்கினார். மருத்துவர் மல்லிகா குழந்தைவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா, கரூர் வைசியா வங்கியின் சி ஆர் எஸ் தலைமை அதிகாரி வைத்தீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர் சரவணன் ராஜமாணிக்கம் பேசுகையில், இந்த மாதம் நுரையீரல் மாதம் என்பதால் தொடர்ந்து நுரையீரல் குறித்த விழிப்புணர்வும், அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறோம். இந்தியா மட்டுமில்லாது உலக அளவில் ஆண்களுக்கு முக்கியத்துவம் என்பது குறைந்து தான் காணப்படுகிறது. உலக அளவில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக இறப்பு அதிகரித்துள்ளது.
அதில் டில்லி, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் காற்று மாசுபட்டு அதனால் நுரையீரல் புற்றுநோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புகையிலை பிடிப்பவர்களுக்கு மட்டும் இந்நோய் வருகிறது என்ற நிலை மாறி சுகாதாரம் அற்ற காற்றினால் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இதில் 40 சதவீதம் பேருக்கு புகைப்படங்கள் இல்லாதவர்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை நுரையீரல் ஸ்கேனிங் செய்து அவசியம் பார்க்க வேண்டும் என்று பேசினார்.