பாஜகவுக்கு JDU அழுத்தம்!
Update: 2024-06-06 07:49 GMT
நடந்து முடிந்த தேர்தலில் மக்களிடையே அக்னிவீர் திட்டம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக JDU கட்சியின் பொதுச்செயலாளர் K.C. தியாகி கூறியுள்ளார்.
JDU மூத்த தலைவர் கே.சி.தியாகி ANI சேத்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணி குறித்து வரும் செய்திகள் வெறும் வதந்திகள். நாங்கள் பாஜக தலைமையிலான NDAவில் ஒரு அங்கமாக இருக்கிறோம். நாங்கள் பிரதமர் மோடியின் தலைமையில் தேர்தலில் போட்டியிட்டோம். நிதிஷ் குமார் தற்போது டெல்லியில் இருக்கிறார். அதில் JD(U) தங்கள் ஆதரவு கடிதத்தை சமர்ப்பிப்பார். நரேந்திர மோடியை பிரதமராக முன்மொழிவார் என JDU மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறினார். பாஜகவின் பொது சிவில் சட்டம்(UCC) குறித்து அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய ஆலோசனைகளை பெற வேண்டும் எனவும் K.C. தியாகி தெரிவித்துள்ளார்.