ரூ. 2 கோடியில் வெள்ள நிவாரணப் பொருட்கள் - இராஜேஸ்குமார் எம்.பி தகவல்
ரூ. 2 கோடியே 2 லட்சம் மதிப்பில் வெள்ள நிவாரணப் பொருட்களை திருவொற்றியூரில் 15 ஆயிரம் குடும்பத்தினருக்கு வினியோகம் செய்யப்பட்டது என கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி தகவல்
நாமக்கல்லில் இருந்து ”மிக்ஜாம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரூ. 2 கோடியே 2 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்கள் திருவொற்றியூர் பகுதியில் உள்ள 20 ஆயிரம் குடும்பத்தினருக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார். இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞா் அறிவாலயத்தில் செய்தியாளா்களைச் சந்தித்தார். அப்போது அவா் பேசுகையில், ‘மிக்ஜாம்” புயல் மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இந்த புயல் மழையின் தாக்கம் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் உள்ள திருவொற்றியூர் பகுதியில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணி மற்றும் நிவாரண பணி மேற்கொள்ள, திருவொற்றியூர் பகுதியில், வனத்துறை அமைச்சர் மருத்துவா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினராகிய நான் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர் பெ.ராமலிங்கம், நாமக்கல் நகராட்சி துணைத் தலைவர் செ.பூபதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.விஸ்வநாத் மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையிலான குழுவினரும் அங்கு மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 05.12.2023 அன்று முதல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14, 15-க்குட்பட்ட புழுதிவாக்கம், திருவொற்றியூர், மணலி, வளசரவாக்கம், தண்டையார்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஆகிய பகுதிகளுக்கு 10.12.2023 அன்று வரை மொத்தம் 31 கனரக வாகனங்களில் பால் பவுடர், பிஸ்கட், ரொட்டி, அரிசி, சமையல் எண்ணெய், ரவை ஆகிய சமையல் பொருட்கள் மற்றும் பிரட், பாய், போர்வை, கைலி, சோப், துண்டு, தேங்காய் எண்ணெய், நாப்கின், நைட்டி, மெழுகு, தீப்பெட்டி, மெழுகுவர்த்திகள், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட ரூபாய் 1 கோடியே 88 இலட்சத்து 62 ஆயிரத்து 837 மதிப்பீட்டில் அதிகபட்சமான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சமூக பொறுப்பு நிதியாக மாவட்ட நிர்வாகம் சார்பிலும், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், சமூக தொண்டு நிறுவனங்கள், பல்வேறு அரசுத் துறை, தனியார் நிறுவனங்களின் மூலமாக ரூ.14.50 லட்சம் நிவாரண நிதி என மொத்தம் ரூ.2.02 கோடி மதிப்பில் 31 கனரக வாகனங்களில் நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதற்கான பணியை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவா் மருத்துவா் ச.உமா சிறப்பாக செய்து, சென்னைக்கு அனுப்பி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வந்த நிவாரணப் பொருட்கள் பெருமளவு திருவொற்றியூர் மற்றும் மணலி பகுதிக்கு வழங்கப்பட்டது.
குறுகிய நாட்களில் ரூ 2.02 கோடி மதிப்பிலான நிவாரணப்பொருட்களை வழங்கிய மாவட்டத்தை சேர்ந்த தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்களுக்கும், நிவாரணப்பொருட்களை முறையாக அனுப்பி வைக்க முயற்சி எடுத்த மாவட்ட ஆட்சித்தலைவா் மருத்துவா் ச.உமா மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கும் எனது நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்களுடன் போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவா்களும் பணியாற்றினார். திருவெற்றியூரில் மீட்பு பணியில் எங்களுடன் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகளும் பணியாற்றினார்கள். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார். பேட்டியின் போது, நகர்மன்ற துணைத் தலைவர் பூபதி, நாமக்கல் ஒன்றியக் கழகச் செயலாளா் வி.கே.பழனிவேல், மாவட்ட அவைத் தலைவர் சி.மணிமாறன், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத் ஆகியோர் உடனிருந்தனர்.